ரூ.300 கோடி நிதி என்னாச்சு?… விவசாயிகள் கேள்வி..

0
467358

தமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும் கட்சியினரே தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கம் அமைத்து, இழுபறியுடன் குடிமராமத்து பணி நடந்தது. ஆனால் 30சதவீதம் முதல் 40சதவீதம் கூட பணி செய்யவில்லை. ஏரிகளை புனரமைத்தும், அமைக்காமலும் பாதியிலேயே நின்றது. 

மழை நின்றபிறகு செய்யலாம் என்றார்கள். ஆனால் பணி நடை பெறவில்லை. ஏரிகள் புனரமைக்கும் பணி நடந்தததாக ரூ.328கோடியையும் சுருட்டிட்டாங்க.இது தொட ர்பாக பிரச்னை எழுந்த போது தமிழக முதல்வரே முன்வந்து ஏரிகளை புணரமை க்க குடிமராமத்து பணிக்கு ஒதுக்கிய ரூ.328 கோடியில் முறைகேடு நடந்தி ருப்பின் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இது வரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது.

வருடா, வருடம் மழை தனது பருவத்தை தாண்டி பெய்கிறது. மழை பெய்வதற்கு முன் நாம் ஏரிகளை தூர் வாருவதில்லை. மழை பெய்கின்ற போது தூர்வாரி கணக்க காண்பிக்கிறார்கள். ஆனால் மக்கள் பணம் ஏரிகளை புணரமைக்கிறோம் என்ற அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளாலும், அரசியல் வாதி களாலும் வீணடிக்கப்படுகிறது. கையாடல் செய்யப்படுகிறது என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இது குறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழைநீரை ஏரிகளில் சேமித்து வைக்காததனால், ஏரிகளில் தண்ணீர் இருப்பதில்லை. கிணறுகளில் தண்ணீர் ஊருவதி ல்லை, போர்வெல் நீர்மட்டமமும் அதளபாதாளத்துக்கு செல்கிறது. இதனால் ஏரிப்பாசன விவசாயமும், விவசாய நிலங்களும், கிணற்று பாசன விவசாயமும் அழிந்து வருகின்றன. மேலும் விவசாயம் செய்யலாம் என பயிர்கடன் வாங்கின விவசாயிகள் கடனில் மாட்டிக்கொண்டு அவமானப்படுத்தப் படுகிறார்கள். தற்கொலையும் செய்து கொள்கிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாக இருந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பு தமிழக அரசும் பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரத்துறையும்) ஏரிகளை புணரமைக்க குடிமராமத்து பணியை முன்கூட்டியே தொடங்கி மழைநீரை ஏரியில் சேமிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் ஏரிகளை புனரமைக்க குடிமராமத்து பணிக்கா ஒதுக்கிய நிதி ரூ.300 கோடி என்னாச்சு என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here