10 ரூபாய்க்கு சாப்பாடு

0
99
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தற்போது ஆளும் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சிவசேனா கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10 ரூபாய்க்கு சாப்பாடு அளிக்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here