புரட்டி எடுக்கப் போகுது- வானிலை மையம் எச்சரிக்கை!

0
113

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. இம்முறை வழக்கத்தை விட அதிகப்படியான மழையை வாரி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பெய்த மழையும் தமிழகத்திற்கு மிகுந்த பலனை அளித்துள்ளது. இருமுறை மேட்டூர் அணை நிரம்பியதால், பாசனத்திற்காக அபரிதமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி வாக்கில் வடமேற்கு பருவமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, பவானி, சென்னிமலை, கொடுமுடி, விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், காவேரி நகர், எம்.ஜி.ஆர் நகர், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 2 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல் திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here