பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்

0
123
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் இனத்தை அழித்த ராஜிவ் காந்தியை, தமிழ் மண்ணில் கொன்று சாய்த்தோம் என்ற வரலாறு எழுதப்படும் என்று பகீரங்கமாக பேசினார்.
இந்த சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. புகார்கள் எழுந்த நிலையில் விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பேட்டி அளித்த சீமான் கூறியதாவது.. ” வழக்குகள் என் மீது பதியப்படுவது ஒன்றும் புதுசல்ல.. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கண்டங்களும், போராட்டங்களும் எழுந்து வருகிறதென்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியில் எடுக்கவும், வெளியில் இருக்கும் என்னை உள்ளே தள்ளவும் காங்கிரஸ் போராடுகிறது.

பிரபாகரனை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் செய்துதான் வருகிறோம். எங்கள் தலைவனை முன்னிறுத்தாமல் வேறு யாரை முன்னிறுத்துவது.ஒரு அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காக, தனக்கென்று ஒரு தேசம் அடைய போராடுவதை காட்டிலும் வேறு என்ன அரசியல் இருந்திட முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேரை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து முற்றிலும் நீக்கப்பட்ட பிறகும், அவர்களை விடுதலை செய்யாதது ஏன். விடுதலைக்காக வழங்கப்படும் மனுக்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது, தேசத்தின் மீதான பெருத்த அவமானமாகவே நான் பார்க்கிறேன். நான் பேசியதை குறித்து பதிந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் கூறினார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேர் சிறையில் உள்ளனர் என பேசும் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ஆமாம்.. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என வெளிப்படையாக பேசியது, 7 பேர் விடுதலையை எதிர்நோக்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here