பிரசாந்த் கிஷோரின் தாக்கம் இருக்குமா?

0
38
ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டம், சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஜனவரி 6-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் தற்போது இருக்கும் திமுக அதற்கான பணிகளில் அண்மைக்காலமாக முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. மேலும் அரசியல் வியூகங்களுக்கு பெயர்போன பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளும் திமுகவில் செயல்படத் தொடங்கியுள்ளன.

வாஸ்து, முன் தயாரிப்புடன் பேசுதல், பழமொழிகளைத் தவிர்த்தல் என சிறிய சிறிய மாற்றங்களுக்குத் தயாராகி வரும் திமுக, இந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன…

மேலும், உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதுகுறித்தும் விவாதிக்கப்படலாம். இந்த கூட்டத்தின் முடிவுகள் மற்றும் அறிக்கையில் பிரசாந்த் கிஷோரின் தாக்கம் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here