நீங்கள் சோஷியல் மீடியா அடிக்டா? உங்களைத்தான் ஜெயம் நியூஸ் தேடுகிறது

0
163

ஃபேஸ்புக்கே உங்கள் முகமா? நீங்கள் வசிப்பது இன்ஸ்டா கிராமமா? ட்விட்டர்தான் உங்கள் ஐடி கார்டா? யூட்யூபில்தான் நீங்கள் தினமும் தண்ணீர் பிடித்துக் குளிக்கிறீர்களா?

உங்களைத்தான் நாங்கள் தேடுகிறோம்.

நீங்கள் இருபத்து நான்கு மணிநேரமும் இணையத்தில் வசிப்பவரா? சமூக வலைதளத்தை அக்கு வேறு ஆணி வேறாக அறிந்தவர் என்னும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? இதழியலிலும் உங்களுக்கு ஆர்வமும் திறமையும் உள்ளதா?

உங்களைத்தான் நாங்கள் தேடுகிறோம்!

இன்றைய இளைய தலைமுறையினர், சர்வதேச சமூக, அரசியல் நகர்வுகளிலிருந்து உள்ளூர்ப் பிரச்சினைகள் வரை விரல் நுனியில் வைத்துள்ளனர். பொய் வாக்குறுதிகளாலும், தவறான தகவல்களாலும் ஏமாற்ற முடியாதபடி விழிப்புடன் செயல்படுகின்றனர்.

ஒரு சாமானியனின் கோபத்தைக்கூட உலக அளவில் டிரெண்டாக்க முடியும் என்ற சூழலைத் தொழில்நுட்பம் நமக்கு பரிசளித்திருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உலகின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புகிறார்கள். அந்த வித்தைகள் தெரிந்த வித்தகரா நீங்கள்.. உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு…

ஜெயம் நியூஸ் இணையதளம் அன்றாடம் லட்சக்கணக்கான தமிழ் மக்களிடையே உடனுக்குடன் தரமான செய்திகளை முந்திக் கொடுத்து வருகிறது. இந்த எல்லைகள் சமூக ஊடகங்கள் மூலம் மேலும் விரிவடைகின்றன. இதை முன்னெடுத்துச் செல்லவும் மேலும் மேலும் அதை விரிவாக்கவும் ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களை எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் சமூக ஊடகங்கள் எனும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்தவராக இருந்தால்…

அதன் தொடமுடியாத கரையை தொட்டுப் பார்க்கத் துடிப்பவராக இருந்தால்…

உங்களுக்கு எழுத்திலும் இதழியலிலும் ஆர்வம் இருந்தால்…

உடனே ஜெயம் நியூஸை தொடர்பு கொள்ளலாம். பத்திரிகைத் துறையில் பரிச்சயமும், தொழில்நுட்பத்தில் நிபுணத்துவமும் பெற்ற நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: jayamnews2016@gmail.com

விவரங்களை அனுப்புங்கள்

வாருங்கள்… ஜெயம் நியூஸ் இணையதளம் என்ற பிரம்மாண்ட மேடையின் மீது ஏறி இந்த உலகத்தை நம் பக்கம் திருப்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here