கங்கைகொண்டான் இளைஞர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்கிய BOSCH நிறுவனம்

0
58

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைத்துள்ள BOSCH நிறுவனம் கிராம இளைஞர்களின் கைத்தொழிலுக்கு பயன்படும் வகையில் கங்கைகொண்டானில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி கடந்த ஒரு மாதமாக திருநெல்வேலியில் அமைந்துள்ள அஜெய் ஓட்டுனர் பயிற்சியின் உரிமையாளர் வள்ளிசெல்வம் அவர்களால் பயிற்சிவிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமத்தை BOSCH நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டு அனைவருக்கும் வழங்கினார்கள்.

BOSCH நிறுவனம் சார்பில் எதிர்வரும் காலங்களில் கங்கைகொண்டானில் உள்ள பெண்களுக்கும் ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளனர். மேலும் கங்கைகொண்டனை சுற்றியுள்ள கிராமத்திற்கும் BOSCH நிறுவனம் சார்பில் தொடர்ந்து சமூக சேவை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here