இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்!

0
108

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது அரசியல் வருகை குறித்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தனது அரசியல் வருகையை உறுதிபடுத்தினார்.

அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவி வருகிறது. இருப்பினும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் கட்சிக்கான கட்டமைப்பை உறுதிபடுத்தி வருவதாக ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

தனது அரசியல் அறிவிப்பிற்கு பின், காலா, 2.0, பேட்ட ஆகிய படங்களில் ரஜினி நடித்து வெளியாகின. சமீபத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே அரசியல் வருகை எப்போது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்த சூழலில் இமயமலைக்கு 5 நாட்கள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்கிறார். அங்கிருந்து டேராடூன் செல்ல உள்ளார். அங்கு சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு, பின்னர் சாலை மார்க்கமாக ரிஷிகேஷ் செல்வார். அங்குள்ள பாபா குகைக்கு சென்று தங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here