இன்றைய முக்கிய செய்திகளை சுருக்கமாக பாப்போம்

0
138

மாமல்லபுரத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் – பிரதர் மோடி இருவரின் பேச்சுவார்த்தையில் காஷ்மீரை குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை எனவும், மாமல்லபுரத்தை தவிர வேறெந்த சிறப்பு மிக்க இடத்தை மத்திய அரசு விரும்பவில்லை எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விஜய் கோகலே கூறியுள்ளார்.

இந்தியா, சீனா நாடுகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாம் முறைசாரா மாநாட்டில் கலந்துகொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னையிலிருந்து நேபாளம் புறப்பட்டார். அவரை தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் வழியனுப்பி வைத்தனர். இதற்கு முன்பாக நடைபெற்ற உபசரிப்பு விழாவில் மோடியின் உரை தமிழ்நாட்டின் சிறப்பை குறித்தே இருந்தது.

தமிழ்நாட்டிற்கும் சீனாவிற்கும் இடையே ஆழமான கலாச்சார உறவு இருந்துள்ளது அதனாலே இரு நாடுகளும் தற்போது பெரும் பொருளாதார சக்தியாக விளங்குகிறது. இந்த நட்பு ரீதியான சந்திப்பின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றை விவரித்ததில் மகிழ்ச்சி” என்று மோடி பேசினார்.

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூா், நாகர்கோவில், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவியை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தியதால் அம்மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… மாணவி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்..

கோவையில் விபச்சார விடுதியாக இயங்கும் மசாஜ் சென்டர்கள்.. புகார்கள் எழுந்த நிலையில் அனைத்து மசாஜ் மையங்களையும் மூட கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரைப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இன்று அகற்றினார். சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது…

கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், கீதாஞ்சலி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான தொழிலதிபர் மெஹுல் சோக்சி பஞ்சாப் & சிந்த் வங்கியில் ரூ.44 கோடியை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. வைர வியாபாரியான நீரவ் மோடியின் உறவினர்தான் இவர்.

விருதுநகர் அருகே அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சேமிப்பு குடோனில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தில் 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன..

இந்திய அணிக்கு எதிராக இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணி, இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.. தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here