இந்திய கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை எட்டியுள்ளது – பிரதமர் மோடி

0
288

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற மோடி, மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த பிரதமர், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை கண்டுகளித்தார் . அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான புத்தகத்தில் பதிவிட்ட பிரதமர், தூய்மை இந்தியா என்ற கனவு நனவாகியிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சபர்மதி ஆற்றங்கரையோரம் நடைபெற்ற தூய்மை இந்தியா வெற்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தின் நினைவாக, 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியாவில் உள்ள கிராமங்கள் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை எட்டியுள்ளது. 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்காக 11 கோடிக்கும் மேலான கழிவறைகளை கட்டியுள்ளதைப் பார்த்து உலகமே ஆச்சர்யப்படுகிறது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பது என்ற இலக்கை 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி

கழிவறைகளைக் கட்டுவதோடு, நீர் சேமிப்பும் முக்கியம் என்று குறிப்பிட்டடார். மேலும் நீர் சேமிப்புக்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட இருப்பதாகவும் கூறினார்.

இந்த விழாவில் ஊரகப் பகுதிகளில் தூய்மையை பேணிக் காப்பதில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here