இது மாஸ், மாஸ்டர் பிளாஸ்டர், மாஸ்டர் ஸ்ரோக்

0
41

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் முகம் தெளிவாக இல்லை. அதுவே லோகேஷ் கனகராஜின் டச் என்று விஜய் ரசிகர்கள் பெருமையாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மாஸ்டர் தலைப்பு மாஸ் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்கே சும்மா கேரா இருக்கு. நன்றாக இருக்கிறது, இந்த கிளாஸி மாஸை ரசிப்பதாக பிகில் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த கதிர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் போஸ்டரை பார்த்த கீர்த்தி சுரேஷ் மாஸ்டர் பிளாஸ்டர் என்று கூறி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது மாஸ்டர் ஸ்ட்ரோக்ணா என்று கார்த்தி நரேன் ட்வீட் செய்துள்ளார்.

Master வழக்கமான மாஸ் ஃபர்ஸ்ட் லுக்குகளில் இருந்து இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் தீயாக உள்ளது என்கிறார் ஹரிஷ் கல்யாண். அவர் சொல்வது உண்மை தான். தெளிவான போஸ்டர் வெளியிட்டிருந்தால் ஹய்யய்யோ போஸில் விஜய் இருக்கிறாரே என்று கூறியிருப்பார்கள். ஆனால் தெளிவில்லாத போஸ்டரால் அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு யோசித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here