அதிமுகவுக்கு செவ்வாய் கிழமை தீபாவளி!

0
165

தமிழ்நாட்டில் காலியாக இருந்த நெல்லை மாவட்ட நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. நாங்குநேரியில் 23 வேட்பாளர்களும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிட்டனர்.

விக்கிரவாண்டியில் 84.41 சதவீதமும், நாங்குநேரியில் 63.35 வாக்குகளும் பதிவாகியிருந்தது. இந்த 2 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த 2 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஆரம்பத்திலிருந்தே முன்னிலையிலிருந்து வந்த அதிமுக, 2 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, சாதி ரீதியாக வாக்காளர்கள் தேர்தலை அணுகி உள்ளனர் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், நாங்குநேரியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாரயணன், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வனும், அக். 29ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சட்டசபையில் 122ஆக இருந்த அதிமுகவின் பலம் இந்த 2 தொகுதிகளில் பெற்ற வெற்றிகள் மூலமாக 124ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here